Economic Pilgrimage Tour
பார்வையிடும் இடங்கள் : சென்னை - ஆக்ரா - மதுரா - அலகாபாத் (திரிவேணி) - அயோத்தி - காசி - சென்னை
பார்வையிடும் இடங்கள் : சென்னை - ஆக்ரா - மதுரா - அலகாபாத் (திரிவேணி) - அயோத்தி - காசி - சென்னை
அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருவருள் துணையுடன் சென்னை ரயில் நிலையத்திலிருந்து இரவு ரயிலில் ஆக்ரா புறப்படுதல். யாத்திரீகள் தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள டிக்கட்டில் உள்ளபடி ரயில் நிலையத்தில் ஒரு மணி நேரத்திற்கு முன்பாக இருக்க வேண்டும். தங்களுக்கு கொடுக்கப்பட்ட இரயிலில், கோச் மற்றும் பர்த் நம்பருக்கு வந்துவிட வேண்டும்
ரயில் பிரயாணம்.
காலை ஆக்ரா அடைந்து ஸ்பெஷல் பஸ் மூலம் மதுரா சென்றடைந்து ஸ்ரீ கிருஷ்ணர் பிறந்த இடம், பழைய கிருஷ்ணர் கோயில் பார்த்து ஆக்ரா வந்தடைந்து தாஜ்மஹால், ஆக்ரா கோட்டை பார்த்து இரவு ரயிலில் அலஹாபாத் புறப்படுதல்.
காலை அலகாபாத் அடைந்து ஸ்பெஷல் பஸ் மூலம் திரிவேணி சங்கமம் சென்று நீராடி பாதாள நிஷயண ஆஞ்சநேயர் கோயில், பரத்வாஜ முனி ஆசிரமம், நேரு பிறந்த ஆனந்த பவனம் பார்த்து இரவு அயோத்தி புறப்பட்டு சென்றடைந்து தங்கல்.
காலை அயோத்தியாவில் சரயு நதியில் ஸ்நானம் செய்து, அயோத்திய ராமர் கோவில், ஹனுமான் கோவில் பார்த்து மாலை காசி புறப்படுதல்.
காலை கங்கை நீராடி துண்டி விநாயகர், ஸ்ரீ அன்னபூரணி, காசிவிஸ்வநாதர் விசாலாட்சி கோயில்கள் தரிசனம் செய்து மதிய உணவு முடித்து காசிநகர் சுற்றிப்பார்த்தல் (பிர்லாமந்திர், துளசிமானச மந்திர், துர்கா மந்திர், சங்கட் மோட்சன், ஹனுமான், கால பைரவர் கோயில்) பார்த்து காசியில் தங்கல்.
காலை 64 கட்டம் போட்டில் சென்று வருதல் மதியம் அவர்கள் இஷ்டம் போல் சாப்பிங் சென்று வருதல். இரவு ரயிலில் சென்னை புறப்படுதல்.
ரயில் பிரயாணம்
காலை திருமுருகன் அருளால் சுகமாக சென்னை பெரம்பூர் ரயில் நிலையம் வந்து சேருதல்.
குறிப்பு:- மேற்படி யாத்திரையில் ரயில் பிரயாணத்தின் போது உணவு அவரவர் செலவு
* இந்த யாத்திரையில் (Sleeper class) ரயில்கட்டணம், சுற்றிப்பார்க்கும் பஸ் கட்டணம், (உணவு, காலை மாலை காபி, மினரல் வாட்டர் பாட்டில் இவை ரயில் பிரயாணம் நீங்கலாக) தங்கும் வசதி ஹால் (Dormitory Hall without Bed) ஆகியவை கட்டணத்தில் அடங்கும்.
* இந்த யாத்திரையில் பார்க்கும் இடங்களின் நுழைவுக்கட்டணம், போட் கட்டணம், ஆட்டோ செலவுகள் ஆகியவை அவரவர் செலவு
* புறப்படுவதற்கு முதல்நாள் Tour Manager பெயர் மற்றும் மொபைல் எண் ஆகியவை தாங்கள் கொடுக்கப்பட்ட மொபைல் எண்ணிற்கு Messge அனுப்பி வைக்கப்படும். அவ்வாறு கிடைக்கவில்லை எனில் அலுவலகத்திற்கு போன் செய்து பெற்றுக் கொள்ளவும்.
* கேன்சல் கட்டண விபரம் : புறப்படுவதற்கு 7 தினங்களுக்கு முன்வரை ரூ.3000/- AC Train Ticket எடுத்திருப்பின் ரூ.4000/- புறப்படுவதற்கு 49 மணிநேரம் முன்புவரை சுற்றுலா கட்டணத்தில் 50% அதன் பிறகு என்றால் 100% கட்டணம் வசூலிக்கப்படும் (No Refund)
* பயணிகள் அனைவரும் ஒரிஜினல் அடையாள அட்டை கொண்டு வர வேண்டும்.
* எதிர்பாராத விதமாகவோ அல்லது இயற்கை சீற்றங்களிலோ இரயில்கள் காலதாமதம் மற்றும் ரத்து அனால் கூடுதல் ஆகும் நேரம் மற்றும் நாட்களுக்கு உண்டான ஆகாரம், தங்கும் செலவுகள் கூடுதல் ரயில், பஸ் கட்டணங்கள் அவரவர் செலுத்த வேண்டும்.
* சில நேரங்களில் சுற்றுலாவிற்கு இரயில் கிடைப்பது மற்றும் விழாக்களை பொறுத்து செல்லும் இடங்கள் முன் பின் செல்வது போலவும் நேர் ரயிலில் டிக்கெட் கிடைக்காத பொழுது இறங்கி ஏறுவது போன்றும் மாற்றி அமைக்கப்படும்.
Copyrights © 2024 Sri Murugan Travel Agency. All Rights Reserved